Enable Javscript for better performance
நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா

    By DIN  |   Published on : 16th April 2018 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பபல்லக்கு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் தமிழ் இளைஞர் பக்தர் கழகம் சார்பில் 33-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த மார்ச் 23-ஆம் தேதி தொடங்கியது. 
    தொடர்ந்து, நாள்தோறும் மகா மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் மற்றும் இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக புஷ்பபல்லக்கில் மகாமாரியம்மன் புறப்பாடு  சனிக்கிழமை இரவு நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த புஷ்பபல்லக்கு அதிகாலை கோயிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    இதையொட்டி, தவில் வித்வான் என்.டி.எம்.எஸ். காமாட்சி சுந்தரம், நாகசுவர வித்வான்கள் என்.எம்.கே. கார்த்தி, என்.எம்.கே. கண்ணன் குழுவினரின் நாதலய சங்கமம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 
    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் டி. அரவிந்தன், கோயில் செயல் அலுவலர் ரெ. அய்யப்பன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், தமிழ் இளைஞர் பக்தர் கழகத்தினர் செய்திருந்தனர்.
    தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை அம்பாள் தீர்த்தவாரி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஏப்.17) விழா நிறைவுபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai