Enable Javscript for better performance
பாதுகாப்பான தமிழகம் பிரசாரக் குழுவுக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டையில் சனிக்கிழமை, பாதுகாப்பான தமிழகத்துக்காக பிரசார பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 
    சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் நித்தியானந்தம், பரசுராம், மோகன், அபிஷேக் ஆகியோர் பாதுகாப்பான தமிழகத்துக்காக பிரசார பயணம் - 2018 என்ற பெயரில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிரந்தரமாக மூடவேண்டும், நீயுட்ரினோ மற்றும் சாகர் மாலா திட்டத்தை செயல்படுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை இருசக்கர வாகனப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். 
    சென்னையில் ஏப்.8-ஆம் தேதி தொடங்கிய பிரசார பயணம் குழுவினர் சனிக்கிழமை (ஏப்.14) முத்துப்பேட்டைக்கு வந்தபோது, கிழக்கு கடற்கரை புறவழிச்சாலை எல்லையில் கருமாரியம்மன் கோயில் தெரு இளைஞர்கள் சக்திவேல், மணி, மோகன், மணிகண்டன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். 
    பின்னர் இப்பயணக் குழுவினர் தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் வழியாக தூத்துக்குடியை நோக்கிச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai