Enable Javscript for better performance
"மாணவியர் திறன் மேம்பாட்டினை வளர்த்துக் கொள்ள வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "மாணவியர் திறன் மேம்பாட்டினை வளர்த்துக் கொள்ள வேண்டும்'

    By DIN  |   Published on : 16th April 2018 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலகளாவிய அளவில் கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், மாணவியர் கல்வி, பொது அறிவுடன் திறன்மேம்பாட்டினையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் சென்னைப் பல்கலைக் கழக அயல்நாட்டு மொழிப்பிரிவு முதன்மையாளரும், ஆங்கிலத் துறைத் தலைவருமான எஸ். ஆம்ஸ்ட்ராங்.
    மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 21-ஆவது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக அளவில் 136 சிறப்புத் தகுதிகளை பெற்ற மாணவியர் உள்ளிட்ட 1,363 பேருக்கு பட்டம் வழங்கி மேலும் அவர் பேசியது: கல்வி என்பது சமூகத்தை மாற்றும் மிக பெரிய கருவியாகும். ஆணும், பெண்ணும் இவ்வுலகில் சமம்தான், ஆணுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் பெண்கள். இந்த உலகம் கல்வியைச் சார்ந்து இல்லாமல், திறன்மேம்பாடு, தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் இணைந்துள்ளது. இந்த மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை தான் கல்வி. இதை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் இந்த மூன்று முக்கியான குறிக்கோள்களை கற்பிக்க வேண்டும்.
    இன்றைய ஆசிரியர்கள், தான் எப்படி படித்தோமோ அப்படிதான் கல்வியை கற்றுக்கொடுக்கப் போகிறேன் என்ற மன நிலையில் இருந்தால், நம்முடைய மாணவர்களின் எதிர்காலத்தை அழிப்பதற்கு சமம். ஏனென்றால், இப்போது இருக்கும் தொழில்நுட்பம் என்பது ஆசிரியராக இருப்பவர்கள் எல்லாம் தொடர்ந்து படித்துக்கொண்ட இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் சிறந்த ஆசிரியராக விளங்க முடியும். மாணவர்களின் எதிர்காலமும் சிறந்ததாக அமையும்.
    ஒரு மாணவன் 21-ஆம் நூற்றாண்டில் எப்படி இருக்க வேண்டும் என்றால், தலைமை பண்பு, நுட்பமான சிந்தனை, தடையில்லா தொடர்பு, கூட்டுறவு மேம்பாடு, கருத்தாளன், எல்லா சூழலிலும் வாழும் திறன், புதிய கண்டுபிடிப்பாளன், தகவலை வெளிப்படுத்தும் திறன், உலகளாவிய குடிமகன், வேலை வாய்ப்பை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர் என  பத்து திறன்களை பெற்றவர்களாக இருந்தால்தான் இக்காலத்தில் மிகச் சிறந்த மாணவராக இருக்க முடியும் என்றார் ஆம்ஸ்ட்ராங். 
    கல்லூரித் தாளாளர் வி. திவாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் சீ. அமுதா, துணை முதல்வர் கந்தவேல், அறக்கட்டளை நிர்வாக் குழு உறுப்பினர் டி. ஜெய்ஆனந்த், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநர் சரவணமுத்து, முதுநிலை கணினி பயன்பாட்டியல் துறை இயக்குநர் ஸ்ரீநாத், நிர்வாக மேலாண்மை இயக்குநர் எஸ்.கே. சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai