Enable Javscript for better performance
ரயில்வேகேட் பராமரிப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வேகேட் பராமரிப்பு பணியால் போக்குவரத்து மாற்றம்

    By DIN  |   Published on : 16th April 2018 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் - மன்னார்குடி ரயில் வழித்தடத்தில் சம்பாவெளி ரயில்வேகேட் தண்டவாள பராமரிப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதால், சாலைப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
    ரயில்வே துறை ஆண்டுக்கு ஒரு முறை ரயில்வேகேட்  தண்டவாள பராமரிப்புப் பணி மேற்கொள்வது வழக்கம். அதன்படி, நீடாமங்கலம் மன்னார்குடி ரயில் வழித்தடத்தில், நீடாமங்கலம் - மன்னார்குடி நெடுஞ்சாலையில் சம்பாவெளி பகுதியில் உள்ள ரயில்வேகேட் பராமரிப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனால், காலை 8 முதல் மாலை 7  மணி வரை நெடுஞ்சாலை வாகனங்கள் மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலத்துக்கு மன்னார்குடி, ராஜப்பையன்சாவடி, ராயபுரம், செட்டிசத்திரம், ஆதனூர் மண்டபம், நீடாமங்கலம் வந்து, பின்னர் கும்பகோணம் சென்றன. 
    இதேபோல், கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் வந்து மன்னார்குடி செல்லும் வாகனங்களும் மாற்று பாதை வழியில் வாகனங்கள் சென்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai