Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வைத்திருந்த விளம்பரப் பதாகை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி அக்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, சனிக்கிழமை மன்னார்குடி நடேசன்தெருவில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விளம்பரப் பதாகை வைத்திருந்தனர். இதை மர்ம நபர்களால் சேதப்படுத்தியிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
    இதையடுத்து, சம்பவ இடத்தில் கட்சியின் நகரச் செயலர் அறிவுக்கொடி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைப் பொதுச் செயலர் ஆர். ரமணி, கட்சி மாவட்டப் பொருளாளர் அ. வெற்றி, மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், கட்சி விளம்பரப் பதாகை சேதம் குறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai