Enable Javscript for better performance
விவசாயம் செழிக்க வேண்டி கோ பூஜை- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் வட்டம், தோட்டச்சேரியில் உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும் கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    தோட்டச்சேரி கோகுலம் கோசாலாவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோ சேவா சமிதி மாவட்ட அமைப்பாளர்கள் உ. சாமியப்பன், ச. சிவராமன், க. சுப்பு அண்ணாமலை உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு, ஆர்.எஸ்.எஸ். தஞ்சாவூர் கோட்டத் தலைவர் அப்பாசாமி தலைமை வகித்தார்.  திருவாரூர் மாவட்டத் தலைவர் மு. பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். 
    மன்னார்குடி விவேகதர்ஷன் அறங்காவலர் ச. பாஸ்கர் வரவேற்றுப் பேசினார்.
    சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, மாநில  பொதுச் செயலாளர் கருப்பு என்கிற எம். முருகானந்தம், பொதுக் குழு உறுப்பினர் ஞானம் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர் சி.எஸ். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    செண்டலங்கார  செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ  ஜீயர் சுவாமிகள், கும்பகோணம் ஜோதி மலை இறைபணி திருக்கூட்டத்தின் திருவடிக்குடில்  சுவாமிகள் ஆகியோர் ஆசியுடன், உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில், 27 பசுக்களை வரிசையாக நிறுத்தப்பட்டு, கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai