Enable Javscript for better performance
மாவட்ட சதுரங்கப் போட்டி: ராகேஷ்சர்மா சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் மாவட்ட அளவிலான சாம்பியன் ஷிப் சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், மன்னை கிரீன்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மன்னார்குடி தரணி வித்யா மந்திர் சார்பில் தென்பரை ஆர். கிருஷ்ணசாமி நினைவு கோப்பைக்கான, மாவட்ட அளவிலான சாம்பியன் ஷிப் சதுரங்கப் போட்டி, தரணி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 9, 11, 13, 15 ஆகிய வயதுக்குள்பட்டோர் என நான்கு பிரிவுகளாகவும், பின்னர் பொது போட்டியாகவும் நடத்தப்பட்டது.
     9-வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில், எஸ். தர்ஷன், ஆர்.ஏ. ஜஸ்வந், தருண் ஆகியோரும், 11- வயதுக்குள்பட்டோர் பிரிவில் ஏ.ஆர். ரோஹித் பிரபாகர், ஆர். குருபிரசாந்த், இ.எஸ். குருநாத் ஆகியோரும், 13 -வயதுக்குள்பட்டோர் பிரிவில் ஏ. அருள்மொழிதேவன், வி. ஸ்ரீராம் சுந்தர், எஸ்.கே. நீரஜ் ஆகியோரும், 15-வயதுக்குள்பட்டோர் பிரிவில் எஸ்.எம். பிரதீப் குமார், வி. மணிபாலன், கே.கே. ஆகாஷ் ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
    இதேபோல், 9-வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் ஆர். மணிமொழி, எஸ். ஸ்ருதிலயா, ஏ.எம். திவ்யதர்ஷினி ஆகியோரும், 11-வயதுக்குள்பட்டோர் பிரிவில் ஆர்.கே. சத்தியசிவஸ்ரீ, எஸ். அபிநயா, எம். யுவஸ்ரீ ஆகியோரும், 13-வயதுக்குள்பட்டோர் பிரிவில் எஸ். ரூபிகா, பி. பிரியதர்ஷினி, விவேதிகா ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.15-வயது பிரிவில் ஆர். தனுஸ்ரீ முதலிடம் பெற்றனர்.
     பொதுப் போட்டியில் பெருகவாழ்ந்தான் எம். ராகேஷ் சர்மா, ஜெயதேவ் ஆர். பாலன், ஆன்சலாம் பால் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இதில் எம். ராகேஷ் சர்மா மாவட்ட சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார்.
    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மன்னார்குடி வட்ட சதுரங்க கழகத் தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார்.கிரீன்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆனந்த், செயலர் ஜி.வி. கிருஷ்ணமூர்த்தி, ரோட்டரி உதவி ஆளுநர் பி. சூரியபிரகாஷ், மாவட்டப் பொறுப்பாளர் எஸ். மீனாட்சி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.  நிகழ்ச்சியில் சதுரங்க கழக மாவட்டத் தலைவர் என். சாந்தகுமார், மாநில இணைச் செயலர் ஆர்.கே. பாலகுணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர். பாலன், தரணி பள்ளி நிர்வாகி எம். இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai