Enable Javscript for better performance
ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில் தீமிதி பிரமோத்ஸவ கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில் தீமிதி பிரமோத்ஸவ கொடியேற்றம்

    By DIN  |   Published on : 17th April 2018 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் தீமிதி பிரமோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தீமிதி பிரமோத்ஸவ விழாவைத் தொடர்ந்து, 40-ஆம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, திரௌபதியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
    இரவு, சீர்காழி பம்பை தங்க மாரிமுத்து குழுவினரின் பாரதக் கதை நடைபெற்றது. ஏப்.26-ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு நடைபெறும் இவ்விழா நிறைவு நாள் வரை பாரதக் கதை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஏப்.23-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai