இளைஞர் தற்கொலை
By DIN | Published on : 18th April 2018 06:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மது அருந்தியதை தந்தை கண்டித்ததால், விஷம் குடித்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டியை அடுத்த கற்பகநாதர்குளம் குடிசேத்தி கிராமத்தைச் சேர்ந்த பத்மநாதன் மகன் மாதவன் (22). இவர் மது அருந்தியதை தந்தை கண்டித்ததால், விரக்தியில் விஷமருந்தி மயங்கினார். இதைத்தொடர்ந்து, மாதவனை உறவினர்கள் மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு அவர் திங்கள்கிழமை இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.