Enable Javscript for better performance
தமிழ் வட்டார நாவல்களின் சொல்லகராதி வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சார்பில் தாக்கோல் எனும் தமிழ் வட்டார நாவல்களின் சொல்லகராதி நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. 
    நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரயர் ப.குமார் நூல் அறிமுகம் செய்தார். நிகழ்ச்சிக்கு  தமிழ்த் துறைத் தலைவர் ப. வேல்முருகன் முன்னிலை வகித்தார்.   ஆங்கிலப் பேராசிரியர் தங்க. ஜெயராமன் நூலை வெளியிட, கல்விப்புல முதன்மையர் செங்கதிர் பெற்றுக்கொண்டார்.
     நிகழ்ச்சியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் க. ராமசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். 
    உதவிப் பேராசிரியர் க. ஜவஹர் நூல் குறித்து மதிப்புரையாற்றினார்.
    இந்த அகராதிக்கு தொகுப்பாசிரியராக இருந்த மாணவர் நி. கனகராசு, அகராதி உருவாக்கப் பணியில் இருந்த சிக்கல்கள், அதன் போக்குகள் குறித்து விரிவாகப் பேசினார்.
    வட்டார சொல்லகராதி குறித்து பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவித்தது: முதுகலைத் தமிழ் பயிலக் கூடிய மாணவர்களுக்கு அகராதியியல் எனும் தேர்வுத்தாள் உள்ளது. இதை பயிலக்கூடிய மாணவர்கள் அகராதி உருவாக்கும் பயிற்சியை மேற்கொள்கின்றனர். 2016-17 ஆம் கல்வியாண்டில் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு படித்த மாணவர்களின் முயற்சியில் விளைந்ததே இந்த நூல்.  ஒவ்வொரு மாணவரும் ஒரு வட்டார வழக்கு நாவலை வாசித்து, அதிலுள்ள வட்டார வழக்குச் சொற்களைத் தேர்வு செய்து, அவற்றிற்குப் பொருள் எழுதி உருவாக்கியதே தாக்கோல் எனும் தமிழ் வட்டார நாவல்களின் சொல்லகராதி நூலாகும். 2013-14 ஆம் கல்வியாண்டிலிருந்து இன்று வரை திருவாரூர் மற்றும் பிற பகுதி சார்ந்த 7,500-க்கும் மேற்பட்ட வட்டார வழக்குச் சொற்கள் மாணவர்களால் தொகுக்கப்பட்டுள்ளன என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai