Enable Javscript for better performance
திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜயந்தி இசை விழா: இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜயந்தி இசை விழா: இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 18th April 2018 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜயந்தி இசை விழா புதன்கிழமை (ஏப்.18) தொடங்குகிறது.
     கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படுவோர் சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர் ஆவர். இவர்களின் ஜயந்தி விழாவை திருவாரூரில் ஆண்டுதோறும் காஞ்சி காமகோடி பீடம் நடத்தி வருகிறது. நிகழாண்டு விழா புதன்கிழமை தொடங்குகிறது. சியாமா சாஸ்திரிகள் இல்லத்தில் புதன்கிழமை காலை மங்கள இசை இசைக்கப்படுகிறது. இதையடுத்து, விசேஷ பூஜைகள், விதை தானம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. மாலையில் இசை விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. இதில் உண்ணிகிருஷ்ணன் -பாட்டு, மாண்டலின் ராஜேஷ்-மாண்டலின், தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜன் -சிறப்புத் தவில், பரூர் எம்.எஸ். அனந்தகிருஷ்ணன்-வயலின், வைக்கம் கோபாலகிருஷ்ணன் -கடம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    இதேபோல், திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் கமலாம்பாள் சன்னிதி எதிரே அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மும்மூர்த்திகள் இசை அரங்கில் தினமும் மாலையில் இசைக்கச்சேரி நடைபெறும்.  இதில்  பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா சமிதி அமைப்பினர்
    செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai