Enable Javscript for better performance
விடுதலைச் சிறுத்தை கட்சிக் கொடி கம்ப சேதத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தை கட்சிக் கொடி கம்ப சேதத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th April 2018 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி அருகேயுள்ள புள்ளவராயன்குடிகாட்டில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    ஏப்.14-ஆம் தேதி சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, புள்ளவராயன்குடிக்காடு கிராமம் பிரதான சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்றப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கட்சிக் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து, அதே இடத்தில் நீடாமங்கலம் ஒன்றியச் செயலர் புதியவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    இதில், கட்சிக் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் வி.த. செல்வம், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைப் பொதுச் செயலர் ஆர். ரமணி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai