Enable Javscript for better performance
வித்வான்மானைக்கால் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    வித்வான்மானைக்கால் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

    By DIN  |   Published on : 18th April 2018 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வித்வான்மானைக்கால் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
    இக்கோயிலில், தீமிதி விழாவையொட்டி, ஏப். 6-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பால் காவடி, மாவிளக்கு முடிஎடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் செலுத்தினர். திங்கள்கிழமை நடைபெற்ற தீமிதி விழாவில், தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். அடுத்து, படுகளக் காட்சியும் அம்பாள் வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவையொட்டி, நாள்தோறும்  மகா பாரதக் கதை பாடல்கள் பாடப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai