Enable Javscript for better performance
உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல்: புஷ்பப் பல்லக்கில் சுவாமி வீதியுலா- Dinamani

சுடச்சுட

    

    உத்திராபதீஸ்வரர் கோயிலில் அமுது படையல்: புஷ்பப் பல்லக்கில் சுவாமி வீதியுலா

    By DIN  |   Published on : 19th April 2018 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி மரக்கடையில் எழுந்தருளியுள்ள உத்திராபதீஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அமுது படையலும், இரவு சுவாமி புஷ்பப் பல்லக்கில் வீதியுலாவும் நடைபெற்றது.
    இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமுது படையல் உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஏப்.11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் பக்தர்களின் மண்டகப்படி நடைபெற்றது. விழா நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு, அமுது படையல் அன்னம் படைக்கப்பட்டது. முன்னதாக, சிறுதொண்டர் நாயனார் வேடம் அணிந்த பக்தர் முன் செல்ல, அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக மின்னொளியில் சுவாமி புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. இதில், கூத்தாநல்லூர், மரக்கடை, லெட்சுமாங்குடி,சேகரை, அத்திக்கடை, பொதக்குடி, வடபாதிமங்கலம், கோரையார்  உள்ளிட்ட  கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai