Enable Javscript for better performance
ஏப்.25 முதல் கோடைகால பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 21 நாள்கள் நடைபெறும் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,  திருவாரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பில் 16 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம், ஏப்.25-இல் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் தொடங்குகிறது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெறும் இந்த முகாமில், தடகளம், கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்குப் பயிற்சியாளர்களைக் கொண்டு 21 நாள்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
    இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தொலைபேசி எண் 04366-227158-இல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai