Enable Javscript for better performance
குடிபோதையில் சுமைவேன் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே மதுப்புட்டிகள் ஏற்றி சென்ற சுமைவேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 3 இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
    பெருகவாழ்ந்தான் அருகேயுள்ள செந்தாமரைக்கண்ணு என்ற இடத்தில் உள்ள அரசு மதுக் கடைக்கு, மதுப்புட்டிகளை ஏற்றி வந்த வேன், மதுப்புட்டிகளை மதுக்கடையில் இறங்கிவிட்டு மன்னார்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தவேனை மன்னார்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டினார். மன்னார்குடி - கோட்டூர் பிரதான சாலை ஓவர்சேரி என்ற இடம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த நிருபன்ராஜ் (25), வசந்த் (23) லோகநாத் (20) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வேனுக்கு முன்பு சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை முந்திச்செல்ல வழிக்கேட்டு, வேன் ஓட்டுநர் ஒலி எழுப்பினாராம். இருசக்கர வானத்தில் சென்றவர் வழிகொடுக்காததை அடுத்து, தொடர்ந்து ஒலி எழுப்பியபடி சென்று முந்தி சென்றுள்ளார். 
    இதில், ஆத்திரமடைந்த மூன்று பேரும், வேனை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து மாரிமுத்துவிடம் தகராறு செய்து வேன் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதுகுறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய நிருபன்ராஜ், வசந்த்,லோகநாத் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai