Enable Javscript for better performance
அனுமதியின்றி மது விற்ற நால்வர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    முத்துப்பேட்டை போலீஸார்,  சார்பு ஆய்வாளர் கணபதி தலைமையில் புதன்கிழமை ரோந்து சென்றபோது, ஜாம்பவானோடை,  கல்லடிக்கொல்லை, கற்பகநாதர்குளம் ஆகிய பகுதிகளில் சிலர் அனுமதியின்றி டாஸ்மாக் மது புட்டிகளை விற்பனை செய்வதைக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேலு, தாஜிதீன், ஐயப்பன் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் டாஸ்மாக் கடைகளில் மது புட்டிகளை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, அவர்கள் 4 பேரை  போலீஸார் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai