Enable Javscript for better performance
அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை எடுக்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கீராலத்தூர் அரசுப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை சீர்வரிசையாக எடுத்து வந்து வழங்கினர்.
     நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அமுதா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆ. வெற்றியழகன் வரவேற்றார். தொடக்கக் கல்வி அலுவலர் இன்பவேணி, கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் முத்தமிழன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆ. துரைராஜ், ஆசிரியர் பயிற்றுநர் பாபி, சிறப்பு ஆசிரியர் ராஜலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பள்ளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai