Enable Javscript for better performance
இருதரப்பினரிடையே மோதல்:7 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவரது மகன் சரண்ராஜ் (24) கடந்த 17-ஆம் தேதி மாலை ஒளிமதி ஓடத்துறை கிராமத்துக்குச் சென்று, நீடாமங்கலத்தில் சாலைமறியல் நடத்தப் போவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாராம்.
    அப்போது, அங்கு வந்த ஒளிமதியைச் சேர்ந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளருமான நடேச. தமிழார்வன் மகன்கள் வக்கீல் தமிழ்ஸ்டாலின் பாரதி, இளந்தமிழன் மற்றும் வீரபாண்டி, செந்தமிழ் ஆகிய 4 பேரும் சேர்ந்து சரண்ராஜை கட்டையால் தாக்கி, அவரது இருசக்கர வாகனத்தை அபகரித்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
    இதுகுறித்து சரண்ராஜ் அளித்த புகாரின் பேரில், நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பாபுராஜ் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
    மற்றொரு புகார்: ஒளிமதி பிரதான சாலையைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜ்குமாரிடம் (20) கடந்த 17-ஆம் தேதி அதே சரண்ராஜ் மற்றும் இளமாறன், வினோத் ஆகியோர் துண்டுப் பிரசுரம் கொடுத்தார்களாம். அதை வாங்க மறுத்த ராஜ்குமாரை 3 பேரும் சேர்ந்து கம்பியால் காலில் தாக்கினார்களாம். இதனால் காயமடைந்த அவர், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், சரண்ராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai