Enable Javscript for better performance
ஏப்ரல் 21 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் பகுதியில்...
    திருவாரூரில் மின் தொடர்பான மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்,  சனிக்கிழமை (ஏப்.21) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து, திருவாரூர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (இயக்குதலும், பராமரித்தலும்) உதவி செயற்பொறியாளர் எஸ். ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    திருவாரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் ஏப். 21- ஆம் தேதி மேற்கொள்ள இருப்பதால், கப்பல் நகர் துணை மின் நிலையம் மற்றும் அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் இடங்களில் காலை 9 முதல்  மாலை 5  மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
    மின்விநியோகம் தடை படும் இடங்கள்: திருவாரூர் நகர், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி, மாவூர், அடியக்கமங்கலம், இபி காலனி, சிதம்பர நகர், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பளாம்புலியூர், புதுப்பத்தூர், நீலப்பாடி உள்ளிட்டப் பகுதிகள்.

    மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகுதிகளில்...
    மன்னார்குடி, கூத்தாநல்லூர் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 21) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், மன்னார்குடி, கூத்தாநல்லூர், சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, காணூர், கோரையாறு, வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai