ஏப்.20-இல் இலவச எரிவாயு இணைப்பு
By DIN | Published on : 20th April 2018 08:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டத்தில் 156 கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு ஏப். 20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
திருவாரூரில் எரிவாயு விநியோகிப்போர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் இந்தியன் எண்ணெய் நிறுவன விற்பனைப் பிரிவு முதன்மை மேலாளர் ராஜரத்தினம் பங்கேற்றுப் பேசியது:
மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் ஒரு அங்கமான உஜ்வலா தினம் ஏப். 20-இல் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் எரிவாயு உருளை இல்லாதவர்களுக்கு புதிய எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 156 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில், எரிவாயு உருளை இல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 156 கிராமங்கள் புகை இல்லாத கிராமங்களாக மாற்றப்பட உள்ளன என்றார்.