Enable Javscript for better performance
காந்தி அமைதி விருதுக்குவிண்ணப்பிக்க இன்று கடைசி நாள்- Dinamani

சுடச்சுட

    

    காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

    By DIN  |   Published on : 20th April 2018 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 20) விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாத்மா காந்தியடிகளின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது கொள்கைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காந்தி அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது.  ரூ.1 கோடி மற்றும் சான்று அடங்கிய இந்த விருதானது, பிரதமர் தலைமையில் தலைமை நீதிபதியால் வழங்கப்படுகிறது. சமூகத்தின் நலிவுற்ற பிரிவினருக்கு சமூக நீதி மற்றும் ஒற்றுமைக்கு காந்திய வழிமுறைகளின் மூலம் சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் பங்களிப்பு செய்த தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய, இனம்,  மத பாகுபாடில்லாமல் இந்த விருது வழங்கப்படுகிறது.
    இதற்கு தகுதியுடையவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்த பாராட்டத்தக்க பங்களிப்பு மற்றும் சாதனைகள் குறித்து தகுதியான அமைப்பிடமிருந்து பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு‌w‌w‌w.‌i‌n‌d‌i​a​c‌u‌l‌t‌u‌r‌e.‌n‌i​c.‌i‌n  என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பம் ஏப்.20-ஆம் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும் .
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai