Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    பரவாக்கோட்டையில் வியாழக்கிழமை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரதான சாலை பரவாக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு இளைஞர் அமைப்பை சேர்ந்த சுரேஷ்குமார் தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தை விவசாயி ஜெயராமன் தொடங்கி வைத்தார். இதில், பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், இளைஞர் அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்றனர். இதையடுத்து, மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை உள்ளிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் வீ. காரிமுத்து முடித்து வைத்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai