Enable Javscript for better performance
கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தின் மூலம் அரசின் நலத் திட்டங்களை அறியலாம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தின் மூலம் அரசின் நலத் திட்டங்களை அறியலாம்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 20th April 2018 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தின் மூலம் அரசின் நலத்திட்டங்களை அறியலாம் என, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
    திருவாரூர் ஒன்றியம் கமலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஒட்டநாச்சியார்குடியில் கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தின் கீழ் புதன்கிழமை நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் மேலும் கூறியது:
     மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் கிராம சுயாட்சி இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    இதையொட்டி, இத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏப்.14 இல் சமூக நீதி நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 156 கிராமங்கள், 147 ஊராட்சிகளில் தூய்மை இந்தியா தினம் அனுசரிக்கப்படுகிறது. 
    அதன்படி, ஊராட்சிகளில் உள்ள அனைத்து தெருக்களை தூய்மை செய்தும், அனைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் மற்றும் சிறு மின் விசைப் பம்புகள் குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஊராட்சியிலுள்ள அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறை உள்ளதை உறுதி செய்து,  தனிநபர் கழிவறை இல்லாதவர்களுக்கு கழிவறையின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
     கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தின் கீழ் ஏப்.20 இல் உஞ்வாலா பஞ்சாயத்து என்ற தலைப்பில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் (சமையல் எரிவாயு இணைப்பு இல்லாதவர்கள்) சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ஏப்.24 இல் பஞ்சாயத்து ராஜ் திவாஸ் என்ற தலைப்பில் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபாவில் அனைத்து தேசிய திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விவாதிப்பும், சிறப்பு கிராம சபையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் அதிகாரம் பெறுதல் சமூக வளர்ச்சி போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
    ஏப்.28 இல் கிராம சக்தி அபியான் என்ற தலைப்பில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பான முறையில் குறித்த காலத்திற்குள் வீட்டினை கட்டி முடித்த பயனாளிகள் கெளரவிக்கப்படுகின்றனர். மேலும் ஊராட்சிகளில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏப்.30 இல் ஆயிஸ்மான்பாரத் அபியான் என்ற தலைப்பில் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பான விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
       மே 2 இல் கிஸான் கல்யாண் காரியசலா என்ற தலைப்பில் 2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், மே 5 இல் ஆஜீவிகா மற்றும் கவுசல் மேளா என்ற தலைப்பில் மகளிர் குழு உறுப்பினர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், வங்கியாளர்கள் வங்கி சேமிப்பு கணக்கு குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்று கிராம சுயாட்சி இயக்கத் திட்டம் குறித்து விழிப்புணர்வு பெற்று பயனடையலாம் என்றார்.
    முன்னதாக ஊராட்சியில் குடியிருப்பு வீடுகளில் தனிநபர் இல்லக் கழிவறை கட்டப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு, தனிநபர் இல்லக் கழிவறை அவசியத்தை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கிக் கூறினார். 
    நிகழ்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டி. சந்தானம், கொராடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு மற்றும் அலுவலர்கள் கலந்து
    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai