Enable Javscript for better performance
கிருஷ்ணகிரிக்கு ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திலிருந்து ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு சரக்கு ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
    நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மற்றும் தலையாமங்கலம், அசேஷம், தெற்குநத்தம், மூவாநல்லூர் ஆகிய திறந்தவெளி சேமிப்பு மையங்களிலிருந்தும் 72 லாரிகளில் ஆயிரம் டன் எடைகொண்ட நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. நெல்மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் 20 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து, நெல் மூட்டைகள் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai