Enable Javscript for better performance
கோரைப்புல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் கோரைப்புல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    தமிழகத்தில் பாரம்பரியத்தில் கோரைப்பாய்க்கு என்று தனி மரியாதை உண்டு.  கோரைப்பாயில் உறங்குவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புல் வகையைச் சேர்ந்த இந்தக் கோரையை பயன்படுத்தி பாய், தரை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால், கோரைக்கு இன்றளவும் கடும் கிராக்கி நிலவுகிறது.
    இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில், கோரைப்புல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  நாகக்குளம், அதம்பார், வெள்ளமண்டபம், அச்சுதமங்கலம் மற்றும் ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு விவசாயிகள் 50 ஏக்கரில் கோரை சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.
    கோரை சாகுபடியை மேற்கொண்டுள்ள நாகக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி அசோகன் கூறியது: 
    நாகக்குளத்தில் கோரைப்புல் சாகுபடியை 5 ஏக்கர் பரப்பளவில் செய்துள்ளேன். குறைந்த தண்ணீரை பயன்படுத்தி நிலத்தடிநீர் மூலம் சாகுபடி செய்திருக்கிறேன். களை எடுப்பு, நடவு உள்ளிட்ட பணிகள் இந்த சாகுபடியில் கிடையாது. தேவையானபோது உரம் மட்டும் தெளித்தால் போதும். கோரை வளர்ந்தவுடன் ஆள்களைக்கொண்டு அறுவடை செய்யப்படும். குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் பயிராகக் கோரை உள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai