Enable Javscript for better performance
சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    உலக அமைதிக்காகவும், சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், மன்னார்குடியில் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில், சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    ராஜகோபாலசுவாமி கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் வி. அஞ்சறைபெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அமைப்பின் முன்னாள் மண்டலத் தலைவர் வி.எஸ். கோவிந்தராஜன் பேசினார்.
    இதைத்தொடர்ந்து சைக்கிள் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தேரடியில் நிறைவடைந்தது. மண்டல இயக்குநர் டி. செல்வகுமார், முன்னாள் தலைவர் ஜி. செல்வகுமார், எஸ். கமலப்பன், செயலர் எம்.வி. முத்தமிழ்ச்செல்வம் மற்றும் தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai