Enable Javscript for better performance
திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்க முடிவு

    By DIN  |   Published on : 20th April 2018 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ள தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
    மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்ற, நகர, ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதாச்சலத்தில் நடைபெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நகர, ஒன்றிய அமைப்பு சார்பில் செயல்படுத்துவது, மே.29-ஆம் தேதி பட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ள தஞ்சை மண்டல இளைஞர் எழுச்சி  மாநாட்டுக்கும், ஜூலை. 8-ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மாநில மாணவரணி பவளவிழா மாநாட்டிற்கு கட்சியினர் அதிகளவில் பங்கேற்க செய்வது, மாநாடுகளை விளக்கி, நகர, ஒன்றியத்துக்குள்பட்ட எட்டு இடங்களில் பொதுக் கூட்டம் நடத்துவது, இயக்க பிரசார புத்தகங்களை அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, காவிரி நதிநீரில் தமிழ்நாட்டுக்கு உரிய உரிமையை பெற்றிடும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலர் வீரத்தமிழன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா. அழகிரிசாமி, மண்டல இளைஞரணிச் செயலர் ரா. வெற்றிகுமார், மாவட்ட இளைஞரணிச் செயலர் ராஜவேல், நகர இளைஞரணிச் செயலர் மா. மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai