Enable Javscript for better performance
நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறை தீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (ஏப். 21) நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், திருவாரூர் வட்டம் புதுப்பத்தூரில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டம், கடகத்தில் திருவாரூர் சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், குடவாசல் வட்டம் பெருமளகரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் வட்டம் நார்த்தங்குடியில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டம் ஒட்டக்குடியில் திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மன்னார்குடி வட்டம் கெழுவத்தூரில் மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம் உதயமார்த்தாண்டபுரத்தில் மன்னார்குடி சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டம் காக்கையாடி சாத்தனூரில் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
    இந்த கூட்டங்களில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்தும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து, பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai