Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், கற்பகநாதர்குளம்- காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இக்கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ரா. முருகேசன் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வே. கந்தசாமி, பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் ந. நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ச. தரணிமாலா, தெ. அக்ஷயா, க. இனியா மற்றும் எ. தினேஷ் ஆகியோருக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நா. சொக்கலிங்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பா. கருணாமூர்த்தி ஆகியோர் பரிசு வழங்கினர்.
    ஓய்வுபெற்ற அலுவலர் மு. சிவஞானம் குறிப்பேடுகளை மாணவர்களுக்கு வழங்கினார். ஆசிரியர் கு. துரைராசு வரவேற்றார். வி. பொற்செல்வி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai