Enable Javscript for better performance
பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் வியாழக்கிழமை தனியார் மினிப் பேருந்தில் பயணம் செய்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு முதியவர் உயிரிழந்தார்.
    மன்னார்குடி அருகேயுள்ள வடக்கு உடையார்மாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சி. ஆனந்தன் (60). இவர், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சிலநாள்களாக நாள்தோறும் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற்று வந்தாராம்.வியாழக்கிழமை காலையில் சிகிச்சைக்கு வந்தவர் பின்னர், வீட்டுக்கு செல்வதற்காக மருத்துவமனை அருகிலேயே தேவங்குடி செல்லும் தனியார் மினிப் பேருந்தில் ஏறி சிறிது தூரம் சென்ற நிலையில், இருக்கையில் அமர்ந்திருந்த ஆனந்தனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பேருந்துக்குள்ளேயே மயங்கி விழுந்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மன்னார்குடி போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று ஆனந்தனின் சடலத்தை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai