Enable Javscript for better performance
மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 20th April 2018 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பருப்பொருள் அறிவியல் துறை (மெட்டீரியல் சயின்ஸ்) சார்பில் அதன் மேம்பட்ட செயல்பாடு தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
    இக்கருத்தரங்கை பல்கலைக்கழகத் தேர்வாணையர் ரகுபதி தொடங்கி வைத்தார். கல்வித் துறைத் தலைவர் செங்கதிர், மாணவர் நலன் தலைவர் நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று அண்மையில் வெளியான ஆராய்ச்சி முடிவுகள், பயன்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினர். 
    தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள், அறிவியலாளர்களிடம் தங்களது சந்தேகங்களைத் தெரிவித்து, விளக்கம் பெற்றனர். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    முன்னதாக பருப்பொருள் அறிவியல் துறைத் தலைவர் பீர் முகமது வரவேற்றார். உதவிப் பேராசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai