Enable Javscript for better performance
மினி லாரி மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகே புதன்கிழமை மினி லாரி மோதி முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
    திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பின்னத்தூரைச் சேர்ந்தவர் காத்தமுத்து (70). முதியவரான இவர், கடைக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, முத்துப்பேட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற மினி லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த எடையூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காத்தமுத்துவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநர் தங்கபாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai