Enable Javscript for better performance
ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 21st April 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன்  வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
    இதை முன்னிட்டு அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டன. சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகள் கொடிமரத்தின் அருகே எழுந்தருள காலை 7.30 முதல் 9.30 மணி வரை ரிஷப லக்னத்தில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களைச் சொல்லியும், தேவாரப் பாடல்களைப் பாடியும் கொடியேற்றத்தை நடத்தி வைத்தனர். சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
    விழாவில், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ச. கிருஷ்ணன், நீடாமங்கலம் வர்த்தகர் சங்க  முன்னாள் தலைவர் என். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்களை கோயில் தலைமை அர்ச்சகர் ரமேஷ் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில், அர்ச்சகர்கள் வழங்கினர்.
    மாலையில் யாகசாலை பூஜை, இரவு சந்திரபிரபையில் சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது. தஞ்சை குரலிசைமணி எம். பாலமுருகன் குழுவினரின் குரலிசை வாத்தியக் கச்சேரி நடைபெற்றது.
    இவ்விழா வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய விழாவான தேர்த் திருவிழா வரும் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அன்றையதினம் குருபகவான் தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    நாள்தோறும் அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம், மகாதீபாராதனை காட்டப்பட்டு இரவு சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai