Enable Javscript for better performance
இளைஞர் நீதிக் குழுமம் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் செயல்படும் இளைஞர் நீதிக் குழும அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    திருவாரூர் குரு தெட்சிணாமூர்த்தி நகர், 3- ஆவது குறுக்குத் தெருவில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்த, இளைஞர் நீதிக்குழுமம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்புக் கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை இட மாற்றம் செய்யப்பட்டது.
     இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கலைமதி பங்கேற்று, சிறார்கள் மீதான வழக்கு விசாரணையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மகிளா நீதிபதி பக்கிரிசாமி, தலைமை குற்றவியல் நீதிபதி இராஜேந்திரன், சார்பு நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் கோவிந்தராஜன், திருவாரூர் முதல் வகுப்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் இளைஞர் நீதிக் குழுமம் முதன்மை நடுவர் குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு, நன்னடத்தை அலுவலர் அருள்தாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai