Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 21st April 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில், மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் 
    நடைபெற்றது.
    மன்னார்குடி மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் ந. ராசகோபால் தலைமை வகித்தார்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி விவகாரத்தில் காலதாமதம் செய்யாமல் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
    தமிழர் தேசிய முன்னணி மாவட்டத் தலைவர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வம், மதிமுக மாவட்டச் செயலர் பி. பாலச்சந்திரன், சமூக ஆர்வலர் ஆலங்கோட்டை இளங்கோவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 
    இதில் சங்க கிளைச் செயலர் வை. மகாதவேன், பொருளாளர் ரா. பன்னீர்செல்வம், துணைத் தலைவர் வீ. கணேசன், துணைச் செயலர்கள் நடராஜன், பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai