Enable Javscript for better performance
குடிநீர்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி ஓடத்துறையில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மின் மோட்டார் சரிவர இயங்காததால், அப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர், ஜாகீர் உசேன் என்பவர் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் காலி குடங்களுடன் பேராட்டத்தில் கலந்துகொண்டனர்.
    தகவலறிந்து வந்த நீடாமங்கலம் போலீஸார் மற்றும் அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நீடாமங்கலம்- திருவாரூர் சாலையில் சுமார் அரைமணி  நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai