Enable Javscript for better performance
கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 21st April 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் ஊதிய விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்: ஊதிய மாற்றம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய முறையை அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற காலவரையற்ற போராட்டத்தின்போது, நீதிபதியை விமர்சனம் செய்ததாக வழக்குப் பதியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை, மீண்டும் பணியமர்த்தாமல் கடந்த 8 மாதங்களாக காலம் தாழ்த்துவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலர் ரவி தலைமை வகித்தார். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
    தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம்: பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் மே 22-ஆம் தேதி நடைபெறவுள்ள காத்திருப்பு போராட்டத்துக்கான ஆயத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.  
    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் டி. மணிவண்ணன் தலைமை வகித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai