Enable Javscript for better performance
சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க புதிய நிர்வாகிகள்- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் நகர சி.ஐ.டி.யு. ஆட்டோ  ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டனர்.
    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர சி.ஐ.டி.யு. ஆட்டோ  ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்யும்  நிகழ்ச்சி மரக்கடை ஆட்டோ ஓட்டுநர் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் டி. வீரமணி தலைமை வகித்து, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். கௌரவத் தலைவர் நா. பாலசுப்ரமணியன், தலைவர் ஜி. மகேந்திரன், பொருளாளர் பொன். ரமேஷ், துணைத்  தலைவர்கள் ஆர். பழனிச்சாமி, வி.எஸ்.பி. துரைராஜ், துணைச் செயலாளர்கள் ஜீ. மூர்த்தி, எஸ்.டி. அறிவழகன்  மற்றும் நிர்வாகக்குழு  உறுப்பினர்கள் 10 பேர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai