Enable Javscript for better performance
சுவாமி தயானந்தா கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்: 313 பேருக்கு பணி நியமன ஆணை- Dinamani

சுடச்சுட

    

    சுவாமி தயானந்தா கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்: 313 பேருக்கு பணி நியமன ஆணை

    By DIN  |   Published on : 21st April 2018 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 313 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 
    இம்முகாமில் 20 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தகுதியானவர்களை வேலைக்கு தேர்வு செய்ய நேர்காணல் நடத்தினர். இதில் தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இவர்களில் சுவாமி தாயனந்தா கல்லூரி மாணவர்கள் மட்டும் 360 பேர் ஆவர்.
    இந்த நேர்காணலில் 313 பேர் வேலைக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்குப் பணி நியமன ஆணையை சுவாமி தயானந்தா கல்லூரி தாளாளர் எம். ஜி. ஸ்ரீநிவாஸன் வழங்கிப் பேசியது: 
    மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற படிப்புடன், திறன்களையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.  பெற்றோருக்கும், பணி செய்யும் நிறுவனங்களுக்கும் நம்பிக்கைக்குரியவர்களாக திகழவேண்டும். விடாமுயற்சி, கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இக்கல்வி நிறுவனத்தில் படிக்கிற மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்திலேயே வேலை வாய்ப்பை பெற்றுத் தருகிறோம், இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.   இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கனகசபேசன், துணை முதல்வர் ஹேமா, விப்ரோ மேலாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லட்சுமி நாராயணன் மற்றும் பேராசிரியர்கள் நாடிமுத்து, சுரேந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai