Enable Javscript for better performance
தாயை தாக்கிய மகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே செலவுக்கு பணம் தர மறுத்ததால் தாயை தாக்கியதாக மகன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    திருவாரூரை அடுத்த ராதாநஞ்சை, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர் (53).  இவர்களது மகன் ஹரிகிருஷ்ணன் (31). தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்குச் சென்ற ஹரி கிருஷ்ணனின் குழந்தைகளுக்கு மலர் செலவுக்கு பணம் ஏதும் கொடுக்கவில்லை என்று கூறி, அவரை குடிபோதையிலிருந்த அவரது மகன் ஹரிகிருஷ்ணன் தாக்கினாராம். 
    இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற மலர், ஏப்.17- ஆம் தேதி வீடு திரும்பினார்.  பின்னர், இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai