Enable Javscript for better performance
நிலுவை ஊதியம் கேட்டு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அங்காடி ஊழியரால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    நிலுவை ஊதியம் கேட்டு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அங்காடி ஊழியரால் பரபரப்பு

    By DIN  |   Published on : 21st April 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் ஊதிய நிலுவைத் தொகை தொடர்பாக அங்காடி ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்கும் வகையில், மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள துறைக்காடு அங்காடி 2 -இல்  மாரிமுத்து என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் 1987 முதல் உதவியாளராகவும் அதன்பின்னர் 1995 முதல் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவருக்கான ஊதியம் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டது.
    இந்நிலையில், எதற்கு என்னை பணியிலிருந்து நீக்கம் செய்தீர்கள் எனவும், எனக்கு வரவேண்டிய இரண்டாண்டு கால ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், மாரிமுத்து அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
    இந்நிலையில், மாரிமுத்து தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது, தனக்கு வேலை வழங்க வேண்டும், இரண்டு ஆண்டு ஊதிய பாக்கியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீக்குளிக்கும் வகையில் மண்ணெணெய் கேனுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தபோது, போலீஸார் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து சமாதானம் பேசி அழைத்துச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai