Enable Javscript for better performance
நீலக்குடியில் துணை மின்நிலையம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், நீலக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் ரூ.2.87 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 33.11 கி.வோ. திறன்கொண்ட துணை மின்நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
    இதையொட்டி, நீலக்குடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி தலைமை வகித்துப் பேசியது:  இந்த துணை மின்நிலையத்தின் வாயிலாக பெரும்புகளூர், நீலக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள வண்டாம்பாளையம், செல்வபுரம், மூலங்குடி ஆகிய ஊராட்சிகளில் விவசாயிகள் உள்பட சுமார் 4,000 பேருக்கு தங்குத் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் என்றார். நிகழ்ச்சியில், மேற்பார்வைப் பொறியாளர் சந்திரசேகரன், வட்டாட்சியர் அன்பழகன்,  செயற்பொறியாளர் சதீஸ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai