மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
By DIN | Published on : 21st April 2018 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மன்னார்குடியை அடுத்த மழவராயநல்லூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.
அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இப்பேரணி, பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கியது. தலைமையாசிரியர் கு. சியாமளாதேவி தலைமை வகித்தார். இப்பேரணியில், 5 வயது நிரம்பிய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்தும் விளக்கும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி பதாகைகளை ஏந்திவந்தனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. முக்கிய வீதிகளின் வழியே இப்பேரணி நடைபெற்றது. இதில் ஆசிரியர் பயிற்றுநர் அனிதா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினர், உதவி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.