Enable Javscript for better performance
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, 7 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
    மன்னார்குடி அருகேயுள்ள மூவாநல்லூர் பிரசான சாலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரது மகள் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். மனைவி கலைச்செல்வி மட்டும் வீட்டில் இருந்துவருகிறார். இந்நிலையில், மகளைப் பார்ப்பதற்காக வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு தஞ்சைக்கு கலைச்செல்வி சென்றார். பின்னர், வெள்ளிக்கிழமை வீட்டுக்கு திரும்பியபோது, பின் பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம், 2 வெள்ளிக் குத்துவிளக்கு உள்ளிட்ட வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
    இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai