Enable Javscript for better performance
ஏப். 28 -இல் முதல்வர் திருவாரூர் வருகை: அதிமுக ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 28 -இல் முதல்வர் திருவாரூர் வருகை: அதிமுக ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 22nd April 2018 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏப். 28 -இல் முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது என திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
    திருவாரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழக உணவுத்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்டச் செயலருமான ஆர். காமராஜ் தலைமை வகித்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், ஜெ. பேரவை நகரச் செயலர் கலியபெருமாள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் வகையில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, திருவாரூரில் அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai