Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அஞ்சலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அஞ்சலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 22nd April 2018 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்த போராட்டத்தில் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரவேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, அதன் மாவட்டச் செயலர் கே.பி. ஜோதிபாசு தலைமை வகித்தார்.
    நிர்வாகிகள் கே.எஸ். செந்தில், ஏ.கே. வேலவன், ஏ. அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai