Enable Javscript for better performance
திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி ஆண்டு விழா

    By DIN  |   Published on : 22nd April 2018 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு கல்லூரி முதல்வர் பழ. கெளதமன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் டாக்டர் கே. கோபால் பங்கேற்று பேசியது:
    நான் பயிலும் காலங்களில் எல்லாம், நமது மாவட்டங்களில் கல்லூரிகள் என்பதே இல்லை. இப்பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளின் பிள்ளைகள் உயர் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம், வேதாரண்யம் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அரசுக் கல்லூரிகளை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்றார் அவர்.
    இதைத்தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களை தமிழ்த்துறை விரிவுரையாளர் நா. ராஜமாணிக்கமும், பல்கலைக்கழகத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியரின் பெயர்களை ஆங்கிலத்துறை விரிவுரையாளர் செ. மணிகண்டனும்
    வாசித்தனர்.
    இதையடுத்து, மாணவ, மாணவியருக்கு பரிசுகளை மக்களவை உறுப்பினர் கே. கோபால் வழங்கினார். கணிதத்துறை விரிவுரையாளர் ஆர். நந்தினி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai