Enable Javscript for better performance
மகளிர் விடுதிகளை பதிவு செய்ய 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் விடுதிகளை பதிவு செய்ய 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    By DIN  |   Published on : 22nd April 2018 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்கள் நடத்துபவர்கள், பதிவு செய்ய ஏப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    வேலை மற்றும் படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் சிறார் இல்லங்கள், மாணவியர் விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் தங்குகின்றனர். விடுதிகள் மற்றும் இல்லங்களை அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகின்றன.
    விடுதிகள், இல்லங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும்போது பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக தமிழக அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
    தற்போது நடைமுறையிலுள்ள இச்சட்டத்தின்படி மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதி நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும். விடுதிகள், இல்லங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், சட்டம் மற்றும் விதிகள் போன்ற விவரங்கள் மாவட்ட இணையதளத்தில் (ற்ண்ழ்ன்ஸ்ஹழ்ன்ழ்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்ட நடைமுறைகளின்படி பதிவு பெறுவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்கள் நடத்துபவர்கள் ஏப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு பெறாமல் இயங்குவது கண்டறியப்பட்டால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
    இதுதொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்புக் கட்டடம், அறை எண்.309 மற்றும் 310, மூன்றாவது தளம், திருவாரூர் - 610 004 என்ற முகவரியிலோ, 04366 - 226299 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது 9790052827 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ, க்ள்ல்ள்ற்ஸ்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அலுவலக வேலை நாள்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனத்தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai