Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  திருவாரூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவர் பி.கே. சிவக்குமார் தலைமை வகித்தார். சங்க சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கோரிக்கை குறித்துப் 
    பேசியது:
    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    காவிரி நீரை நம்பி தமிழகத்தில் விவசாயிகள் உள்ளிட்ட 7 கோடி பேர் உள்ளனர். இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்  கொண்டு, மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவது தாமதப்படுமானால்,  அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், காலம் தாழ்த்தும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் முழக்கமிடப்பட்டது. இதில், அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai